Friday, 5 September 2014

Memories #மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்
அன்று கோடை மழை
குடைக்குள் இதழ்களின் மௌனம்
கண்களில் மோக மொழிகள்
குடைக்குள் பெய்த முதல் மழை
முதல் முத்தம், முதல் காதல்!!
விரல்கள் நடத்திய வேதியல் பாடங்கள்
உன் கூந்தல் என் மேனியில் வரைந்த ஓவியங்கள்
அன்று நீ குடைக்குள் என் மனதில் எழுதிய காதல் கவிதை
மறக்க நினைக்கிறன்!!!

Tuesday, 26 August 2014

Love Marathon

காதல் Marathon
வருடங்களாய் ஓடுகிறேன்
மூச்சு திணறி தத்தளிக்கிறேன்
பிடிவாதம் உன் குணம்
கேட்கவில்லை என் மனம்
நீதான் என் பலவீனம்
துணையாக உன் விரல் வேண்டும்
எத்தனை நாள் தொடரும் இந்த புதிர் போட்டி
இருளில் நிற்கிறேன் கண்களை கட்டி
உன்னை காணா கண்களின் தவிப்பு
நூலகம் போல் சேர்த்து வைத்திருக்கிறேன் உன் சிரிப்பு
தூக்கம் கலைத்த கனவுகள்
நடு இரவில் எழுதிய கவிதைகள்
மூளைக்குள் உண்டாகும் உன் எண்ண அலைகள்

என் இதயத்தை காயம் செய்யும் அணு உலைகள் 
என்று முடியும் இந்த காதல் Marathon??

Saturday, 16 August 2014

பூலோகம் இல்லையேல் மேலோகம் # save planet earth

காற்றில் நீந்தி நிலவுக்கு சென்று
நிலவில் நீர் தேடி
நாட்டைவிட்டு வெளியேறி
நாடோடிகளாய் குடியேறலாம்
நம் நிழலின் நிறம் மாற்றலாம்
நகத்தை உணவாக்கலாம்
நடந்து நோய் தீர்க்கலாம்



# பூலோகம் இல்லையேல் மேலோகம்

Friday, 16 May 2014

.................நிலவும் தூங்கிவிட்டது.......

.................நிலவும் தூங்கிவிட்டது.......
நீதான் என் துணை என்று நிலவோடு பேசிக்கொண்டிருந்தேன் 
நேற்று வரை மோக மழை பொழிந்த அவளும்
மேகப்போர்வை போர்த்திக் கொண்டு அயர்ந்து தூங்குகிறாள் 
ஏன் இந்த தூக்கம் என் கண்களை மட்டும் கண்டுகொள்வதில்லை ??

அக்னி நட்சத்திரம்



அல்சர் வலியுலும் கொடியது, இந்த
அக்னி   நட்சத்திர வெயில் #AgniNatchathiram



Wednesday, 14 May 2014

LifeisBeautiful

விதி விளம்பர இடைவேளை இல்லாமல் விளையாடும் விளையாட்டு வாழ்க்கை!! #LifeisBeautiful


Tuesday, 13 May 2014

Fall

Don't try to give back my fallen leaves
Just Water me....I want some fresh leaves ...!!!
#itsfall

SmokingisinjurioustoHealth

புகையின்றி வாழ முடியாது என்கிறாய்
நுரையீரல் இன்றியும் வாழ முடியாது நண்பா!!
#smokingisinjurioustohealth


வேலையில்லாபட்டதாரி

நாவு பசி உணராது 
கால்கள் வலி அறியாது 
மூளை செயல் இழக்காது 
வேலை கிடைக்கும் வரை 
#வேலையில்லாபட்டதாரி


monsoonrain

சென்னை வெயிலில் வானுக்கும் வியர்கின்றது...
தமிழகம் எங்கும் கன மழை !!!!
#monsoonrain