Thursday, 13 June 2013

கடற்கரையில் காதல்

கடற்கரையில் கட்டுகடங்காத காதல் <3<3




காற்றுக்கு காகிதம் மேல் காதல் <3<3
சிறுவன் கடற்கரையில் பறக்க விட்ட பட்டத்தால்
அலைகளுக்கு மண் மீது காதல் <3<3
யாரோ கட்டி வைத்திருந்த மணற்வீட்டால்


Wednesday, 5 June 2013

சென்னையில் இலையுதிர் காலம் !!!!


உறவென்று சொல்லிக்கொள்ள என் நிழல் மட்டும் தான் இன்று
துள்ளி திரிந்த காலத்தில் ஒட்டி இருத்த இலைகள் யாவும் ,
விட்டு உதிர்ந்து விட மிச்சம் இருக்கும் நம்பிக்கை  கொண்டு
மழைக்காய் காத்திருக்கிறேன் !!
என் நிலைக்காய் யார் அழுதும் பயனில்லை,வான் அழவேண்டும்
சுட்டு எரித்திடும் சூரியன் தாண்டி வானில் அதிசயம் நடக்க தினம் வேண்டுகிறேன் ....
இப்படிக்கு கண்ணீருடன் மரம் :'( :'(





Friday, 31 May 2013

சொட்ட தலை

சொட்ட தலையா !!!!!!




என் தலையில் குடியிருப்பு வசதிகள் சரி இல்லையா என்ன ????
என் தலையை சொட்டயாய் தவிக்க விட்டு, 
இவ்வளவு வேகமாய் காலி செய்கின்றன
முடிகள் !!!!!

Thursday, 30 May 2013

கண்கள் போராட்டம்


கண்ணீர் போராட்டம்
தங்கள் காதல் மொழியை செம்மொழியாக்க ....


Saturday, 25 May 2013

அம்மா

வீதிகளில் கோயில்கள் எதற்கு வீட்டில்  அம்மா இருக்க ??

கவலை இன்றி  இதமாக படுத்திருந்தேன்
உன் கருவறையில் ..
நீ இருக்கும் தைரியத்தில் உன் உடலை
விட்டு இவ்வுலகம் வந்தேன்
எனது  உலகம் பெரிதானது
உனது உலகம் என்னை சுற்றி சிறிதானது
என்னை அணைத்து பலன் கொடுத்தாய்
விரல் பிடித்து நடை கொடுத்தாய்
அம்மா என்று  முதல் மொழி  கொடுத்தாய்
உனக்கு,உலகில் பெரிய வெற்றி எனது வெற்றிதான்
எனக்கான உன் வேண்டுதல், கடவுளுக்கு தினம் தொல்லை
என்  முக அசைவுகள் தெரியும்
சிரிப்புக்குள் மறைக்கும் சோகங்கள் புரியும்
கல்லூரி செல்லாத மனதத்துவ நிபுணர் நீ
வீதிகளில் கோயில்கள் எதற்கு வீட்டில்  அம்மா இருக்க ??








பைத்தியமா நான் ??



பைத்தியமா நான் ??


பிழைகளுடன் மனதில் வருவதை கிறுக்கினேன் கவிதை என்று ரசித்தாள்..
பிழையன்றி மனதில் வந்த காதலை கூறினேன்
பைத்தியம் என்றுவெறுத்தாள்..