Tuesday, 29 November 2011

feelings


....................ஏன் இந்த விரிசல் ????.......................

விடையை தேடினேன் விடியும் வரை 
விடையே இல்லா வினாவா இது 
இல்லை விதியின் சதியா இது 
எதனால் இந்த மாற்றம்?
உனக்கேதும் புரிகிறதா ?
எனக்கேதும் புரியவில்லை....
இந்த உறவுகள் என்பது மாயம்
கண்ணீரில் கரையும் சாயம் 
நாம் சிரித்த காலங்கள் எங்கே ??
என சிந்திக்கும் காலங்கள் இங்கே !!!:( :( 

Friday, 25 November 2011

love poems

                         கனவு 
மூடிய கண்களுக்குள் 
தேவதையை ரசித்துக்கொண்டிருந்தேன் 
காதருகே செல்போன் சிணுங்க 
தூக்கம் கலைந்தது ,
கண்களை திறக்காமல் அவளை தேடினேன் 
வெட்கத்தில் கனவுக்குள் நிற்காமல் 
கண்களை தாண்டி ஓடினாள்!!!
அழைப்பது யார் என்று பார்த்தேன்
அங்கேயும் அவள் பெயர் தான் :)
கனவுக்குள்ளும்
செல்போன் அலைவரிசைகுள்ளும் புகுந்துகொண்டு 
என் நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்க வைக்கிறாள் !!!!

Friday, 18 November 2011

rain




சென்னையில் மழைக்காலம் 


Black Dress ல் மேகம் பார்த்து                
மோகத்தில் மின்னல் கண் சிமிட்ட
மேகம் வெட்கத்தில் சிணுங்கியது,
இடியுடன் கடும் மழையாய்!!!!!

குடையினால் ஏன் இந்த வெட்கத்தை
 தடை செய்கிறோம் ????
குடைகளை எறிந்துவிட்டு
இந்த வெட்கத்தை ரசித்திடுவோம் !!
முழுதாய் நனைந்து விட்டு
காய்ச்சலுக்கு சவால் விடுவோம்!!!

Monday, 14 November 2011

ஏமாற்றம்

ஏமாற்றம் என்பது புதிதா உனக்கு ? 
கன்னத்தில் உரசிய கண்ணீர்
நகைத்துக் கொண்lடு ஏளனம் செய்தது ,,,
இழப்பதிற்கு இனி ஒன்றும் இல்லை 
இதுவே என் கண்களில் இறுதியாய் இருக்கும் 
கண்ணீர் துளிகள்!!!!!!!

Saturday, 5 November 2011

miss you friends


                                         இணைந்திருப்போம்!!!!!


சிறை வாழ்க்கை என்ற கவலையில் 
சில காலம் சிக்கி இருந்தோம் 
நட்பெனும் விலங்கினால் நம் கைகள் இணைந்தன 
நமக்குள் அன்பு விதையின்றி வளர்ந்தது 
சிறகுகள் முளைத்து விண்ணில் பறந்தோம் 
விண்ணையும் தாண்டி விண்மீன் பிடித்தோம்  
சிரிப்பில் தொடங்கி 
சிகரெட்டை பகிர்ந்தோம் 
இரண்டு வருடம் சிகரெட் போல் புகைந்து விட்டது 
சில தினங்களில் சிறையில் இருந்து விடுதலை 
கைகளை சேர்த்த நட்பெனும் விலங்கினை அவிழ்க்காமல்
உடலால் மட்டும் பிரிந்து செல்வோம் 
நம் நட்பால் நம் அன்பால் இணைந்திருப்போம்!!!!! :( :(




Friday, 4 November 2011

கள்வர்கள்


                கள்வர்கள்!!!!!


என் எதிரி உன் விரல்கள் தான்
உன் இதழ்களில் முத்தமிடுகின்றன.......
சதி செய்யும் உன் கூந்தல் திட்டமிட்டு 
உன் தோள் சாயா காற்றில் கலைகின்றன...
ஏன் இந்த தென்றல் மூச்சாய் நுழைந்து 
உன் இதயம் திருட பார்கின்றது????